மந்திர மூர்த்தி திருத்தலம்
மூஷிகவாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விளம்பிதசூத்திரம் . வாமநரூப மஹேஶ்வரபுத்ர விঘ்நவிநாயக் பாத நமஸ்தே விக்னங்கள் - தடைகள் யாவையும் - தகர்த்து நல் வழி வழங்கும் மூஷிக வாகன விநாயக - மந்திர மூர்த்திக்கு - அநேக நமஸ்காரம். தேர்வில் இரண்டொரு முறை முயன்றும் தேர்ச்சி பெறாத நிலையில், ஒரு உறவினர் அத்தை என்னிடம் தினசரி எழுந்ததும் மஹா மந்திர மூர்த்தி தெய்வத்தை நினைந்து மனசார துதித்து நாளைத்துவங்கு , நாளெல்லாம் நல்லதே நடக்கும், நினைத்த கார்யம் கைகூடும் என்றார். அன்றிலிருந்து என் நாள் துவங்குவது எல்லாம் மந்திர மூர்த்தி, மற்றும் குல தெய்வப் பிரார்த்தனை உடன் தான். மந்திர மூர்த்தி என்று சொல்கிற போதே, ஏன், நினைத்த மாத்திரத்திலேயே you get a + vibration. நல் உள்ளம் கொண்ட ஐந்து வீட்டார் என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற நகரத்தார் பெரு மக்களால் நிர்வகிக்கப் படுகிற அழகு மிகு சிறிய ஆலயம். மூர்த்தி சிறியது. கீர்த்தி மேன்மையானது. இத் திருக்கோவில் அமைந்திருக்கும் அழகிய, அமைதி ததும்பிய சின்னஞ் சிறிய கிராமம் இறகுசேரி. இராமாயணம் தொடர்பில்லாத ஏதேனும் இடம் உண்டா இந்த அகண்ட பாரத தேசத்தில்!...